ஆம்னி பேருந்துகள், சரக்கு வாகனங்களுக்கு வரி உயர்வு அமல்..ஆட்டோ, கார்கள்,’கேப்’களுக்கு புதிய வரி நிர்ணயம்

சென்னை : தமிழ்நாட்டில் மோட்டார் வாகனங்களுக்கான அரசின் திருத்தப்பட்ட வரி குறித்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி சரக்கு வாகனங்கள், வாடகை வாகனங்கள், பயணிகள் போக்குவரத்து வாகனங்கள், சுற்றுலா வாகனங்கள், ஒப்பந்த வாகனங்கள், ஆம்னி பேருந்துகள், அனைத்து புதிய மற்றும் பழைய இருசக்கர வாகனங்கள், ஆட்டோ உட்பட 3 சக்கர வாகனங்கள், கல்வி நிறுவனங்களுக்கு சொந்தமான பேருந்துகள் மற்றும் வாகனங்கள், கட்டுமானத்திற்கு பயன்படுத்தும் வாகனங்கள், கார்கள், டேக்சிகள், கேப்களுக்கு புதிய வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதில் வாடகை பயணிகள் போக்குவரத்து வாகனங்களில் சுற்றுலா மற்றும் ஒப்பந்த வாகனங்களுக்கு காலாண்டு வரி ரூ.4,900மும் 35 பேருக்கு மேல் பயணித்தால் இருக்கைக்கு ரூ.3000மும் படுக்கை வசதி ஆம்னி பேருந்துகளுக்கு ரூ. 4000 வரையிலும் வரி உயர்கிறது. புதிய பைக்குகளுக்கு வாழ்நாள் வரி, ரூ.1 லட்சம் வரை 10%மும்,ரூ.1 லட்சத்திற்கும் மேல் இருந்தால் 12$மும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 15 ஆண்டுகள் நிறைவடையாத பைக்குகளுக்கு 5 ஆண்டுகள் பசுமை வரி ரூ.750, மற்ற மோட்டார் வாகனங்களுக்கு ரூ.1,500 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Related posts

திருப்பதி அன்ன பிரசாதத்தில் பூரான் இருந்ததாக கூறப்படும் செய்தி முற்றிலும் தவறானது: திருமலை தேவஸ்தானம் விளக்கம்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும்.! இயல்பைவிட கூடுதல் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

ரத்த அழுத்தத்தை சீராக்கும் ‘பேஷன்’ பழம்: ஊட்டியில் கிலோ ரூ.400க்கு விற்பனை