பழைய விமான நிலையம் அருகே சிக்னல் கம்பம் மீது பஸ் மோதி விபத்து

ஆலந்தூர்: மீனம்பாக்கம் பழைய விமான நிலையம் அருகே தனியார் ஆம்னி பேருந்து போக்குவரத்து சிக்னல் கம்பம் மீது மோதி விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவையில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் ஆம்னி பேருந்து ஒன்று சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. மீனம்பாக்கம் பழைய விமான நிலையம் அருகே பேருந்து வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து போக்குவரத்து, சாலையில் இருந்த சிக்னல் கம்பம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கியது. அதிர்ஷ்டவசமாக பேருந்தில் இருந்த பயணிகளுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. இதனால் ஜி.எஸ்.டி.சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த பரங்கிமலை போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போக்குவரத்தை சீர் செய்தனர். மேலும் இதுகுறித்து போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

தமிழகத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவு விரிவாக்க திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் 15ல் தொடங்கி வைக்கிறார்: திருவள்ளூர் மாவட்டத்தில் பிரமாண்ட விழாவுக்கு ஏற்பாடு

முதல்வராக நேற்று பதவியேற்ற நிலையில் ஹேமந்த் அரசு மீது 8ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு: 47 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளதால் பிரச்னையில்லை

ஒன்றிய அரசின் குற்றவியல் சட்டத்தை எதிர்த்து; திமுக சார்பில் நாளை உண்ணாவிரத போராட்டம்: சட்டத்துறை செயலர் என்.ஆர். இளங்கோ அறிவிப்பு