ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 1,500 கனஅடியாக அதிகரிப்பு

பென்னாகரம்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால், ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து சரிந்து வந்தது. ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம் 700 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை நிலவரப்படி வினாடிக்கு 1,500 கனஅடியாக அதிகரித்தது. இதேபோல், மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் 150 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலையும் அதேஅளவில் நீடித்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக, விநாடிக்கு 600 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவை விட திறப்பு அதிகமாக உள்ளதால், நீர்மட்டம் சரிந்து வருகிறது. நேற்று முன்தினம் 70.80 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று காலை 70.74 குறைந்தது. நீர் இருப்பு 33.33 டிஎம்சியாக உள்ளது.

Related posts

3.5 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ இயக்கப்படுவதாக அறிவிப்பு

தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை கதீட்ரல் சாலையில் கலைஞர் நூற்றாண்டு பூங்காவை நாளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்