ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 25,000 கனஅடியாக அதிகரிப்பு: பரிசல் இயக்க தடை

ஒகேனக்கல்: கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில், மீண்டும் மழை பெய்து வருவதால், கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒகேனக்கல் காவிரியில் நேற்று காலை 25,000 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக நேற்று முதல் பரிசல் இயக்கவும், அருவிகளில் குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதேபோல், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று 19,199 கனஅடியாக அதிகரித்தது. பாசனத்திற்கு 14,200 கனஅடி வீதம் திறக்கப்படுகிறது. வரத்து அதிகரித்துள்ளதால் அணையின் நீர்மட்டம் 115.56 அடியிலிருந்து 115.82 அடியாக உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 86.95 டிஎம்சியாக உள்ளது.

Related posts

ஆம்னி பேருந்தில் பார்சலில் இருந்த ரூ. 2.15 கோடி ரொக்கம் பறிமுதல்

புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு திருவள்ளூர், காஞ்சி, செங்கை மாவட்ட பெருமாள் கோயில்களில் பக்தர்கள் கூட்டம்

பராமரிப்பு பணி; சென்னை கடற்கரை – தாம்பரம் வரையிலான புறநகர் ரயில் சேவை நாளை ரத்து!