ஆந்திர மாநில துணை முதலமைச்சராக பவன் கல்யாண் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு!

ஆந்திர: ஆந்திர மாநில துணை முதலமைச்சராக பவன் கல்யாண் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆந்திர மாநிலத்தில் நடந்து முடிந்த பேரவை மற்றும் மக்களவை தேர்தலில் தெலுங்கு தேசம், ஜனசேனா, பாஜக கூட்டணி 175 பேரவை தொகுதிகளில் 164 தொகுதிகளையும், 25 மக்களவைதொகுதிகளில் 21 தொகுதிகளிலும் தெலுங்கு தேசம் கூட்டணி வெற்றி பெற்றது.

இதன் மூலம் தெலுங்கு தேசம் கட்சி ஆந்திராவில் மீண்டும் ஆட்சி அமைத்து, 4வது முறையாக ஆந்திர முதல்வராக சந்திரபாபு பதவியேற்றார். தேர்தல் வெற்றியை உறுதி செய்ததில் ஜனசேனா கட்சி தலைவரும், நடிகருமான பவன் கல்யாணுக்கு பெரும் பங்குண்டு. ஜனசேனா கட்சி 21 சட்டப்பேரவை மற்றும் 2 மக்களவை தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது. இதன் காரணமாக பவன் கல்யாண் துணை முதல்வராக தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், ஆந்திரப் பிரதேச மாநில துணை முதலமைச்சராக பவன் கல்யான் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பவன் கல்யாணுக்கு பஞ்சாயத்து ராஜ், ஊரக வளர்ச்சித்துறை, வனம் உள்ளிட்ட துறைகள் ஒதுக்கீடு ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது. ஆந்திர மாநில அமைச்சர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கீடு விவரம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

 

Related posts

ஆம்ஸ்ட்ராங் படுகொலை பேரதிர்ச்சியையும் பெரும் வருத்தத்தையும் அளிக்கிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

அஞ்சலிக்காக ஆம்ஸ்ட்ராங்கின் உடலை ரயில்வே மைதானத்தில் வைக்க பிஎஸ்பி நிர்வாகிகள் கோரிக்கை

வேதாரண்யம் அருகே கரை ஒதுங்கிய இலங்கை படகு