அதிகாரிகள் உதவியுடன் பேராசைக்காரர்கள் அரசு நிலங்களை ஆக்கிரமிப்பது அதிகரிக்கிறது: ஐகோர்ட் கிளை

மதுரை: அரசு நிலத்தை ஆக்கிரமிப்போர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் ஆக்கிரமிப்பை அகற்றாத அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை சேர்ந்த சையது அலி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் தொண்டியில் பொதுப்பாதை ஆக்கிரமிக்கப்பட்டதால் அப்புகுதி வாசிகள் அதனை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. பொதுமக்கள் பயன்படுத்த ஏதுவாக ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறபட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி அதிகாரிகள் உதவியுடன் பேராசைக்காரர்கள் அரசு நிலங்களை ஆக்கிரமிப்பது அதிகரிக்கிறது. சமீபகாலமாக நிலங்களின் சந்தை மதிப்பு பல மடங்கு உயர்வதால் அரசு நிலம் ஆக்கிரமிப்பு அதிகரிக்கிறது வருகிறது என வேதனை தெரிவித்தார்.

Related posts

உத்தரப்பிரதேசத்தில் ஆன்மிக நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி 122 உயிரிழப்பு: தலைவர்கள் இரங்கல்

அமாவாசை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்

பவானிசாகர் அணை நீர்மட்டம் 66 அடியாக உயர்வு