சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் ரெய்டு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை வேட்டவலம் சாலை சந்திப்பில் உள்ள, இணை சார் பதிவாளர் அலுவலகத்தில் (எண் 2), தினமும் சராசரியாக 50 பத்திரப் பதிவுகள் நடைபெறுகிறது. இதில் முறைகேடு நடப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசுக்கு புகார் கிடைத்தது. இதையடுத்து நேற்று மாலை 5 மணியளவில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் குழுவினர், அங்கு அதிரடியாக சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத ரூ.45 ஆயிரம் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக, சார் பதிவாளர் மற்றும் அங்கிருந்த ஊழியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். தற்காலிக பணியாளர்கள் எனும் பெயரில் அங்கிருந்த சிலரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு கூகுள் பே உள்ளிட்ட செயலிகள் மூலம் பண பரிவர்த்தனை ஏதேனும் நடந்திருக்கிறதா எனவும் சோதனை நடத்தினர். இந்த சோதனை இரவு 9 மணி வரை நீடித்தது.

Related posts

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு

சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை காண்பதற்காக புறநகர் ரயில்களில் 3 லட்சம் பேர் பயணம்