ஒடிசி மோட்டார் சைக்கிள்

மும்பையைச் சேர்ந்த ஒடிசி எலக்ட்ரிக் நிறுவனம், ஒடிசி வாடெர் மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. அறிமுகச் சலுகை விலையில் அகமதாபாத் ஷோரூம் விலையாக சுமார் ரூ.1.10 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில் 3 கிலோவாட் மோட்டார், 3.7 கிலோவாட் அவர் லித்தியம் அயன் பேட்டரி இடம் பெற்றுள்ளது. இந்த பைக்கை முழுமையாக சார்ஜ் செய்ய 4 மணி நேரம் ஆகும்.

முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 125 கி.மீ தூரம் வரை செல்லலாம். அதிகபட்சமாக 85 கி.மீ வேகம் வரை செல்லலாம். ரைடிங், ரிசர்வ்ஸ் மற்றும் பார்க்கிங் என 3 மோட்கள் உள்ளன. ஆன்லைனில் ரூ.999 செலுத்தி முன்பதிவு செய்யலாம் எனவும், வாகனங்கள் ஜூலையில் டெலிவரி செய்யப்படும் எனவும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி