ஒடிசா நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் தமிழ்நாட்டின் பாண்டியன்

புவனேஷ்வர்: ஒடிசா தேர்தலையொட்டி பிஜூ ஜனதா தளம் வௌியிட்டுள்ள நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் தமிழ்நாட்டை சேர்ந்த முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி வி.கார்த்திகேய பாண்டியன் இடம்பெற்றுள்ளார். ஒடிசாவில் 21 மக்களவை தொகுதிகளுக்கும், 147 பேரவை தொகுதிகளுக்கும் மே 13, 20, 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் நான்கு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. பேரவை தேர்தலில் முதல்வர் பட்நாயக் கஞ்சம் மாவட்டம் ஹிஞ்சிலி, போலாங்கிர் மாவட்டம் காந்தபாஞ்சி தொகுதியிலும் போட்டியிடுகிறார். இந்த தேர்தலில் ஒடிசாவில் முதல்வருக்கு அடுத்தபடியாக அதிகார மையமாக உள்ள தமிழ்நாட்டை சேர்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி வி.கார்த்திகேய பாண்டியன் போட்டியிடவில்லை. இந்நிலையில் பேரவை, மக்களவை தேர்தல்களையொட்டி பிஜூ ஜனதா தளத்தின் 40 பேர் அடங்கிய நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் நேற்று வௌியிடப்பட்டது. இந்த பட்டியலில் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், வி.கார்த்திகேய பாண்டியன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மேலும் பிஜூ ஜனதா தள அமைப்பு செயலாளர் பிரணாப் பிரகாஷ் தாஸ் உள்ளிட்டோர்நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.

Related posts

டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா.!

17 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா: உலகம் முழுவதும் இந்திய ரசிகர்கள் கொண்டாட்டம்

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி