புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தில் 147 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல், மக்களவை தேர்தலுடன் சேர்த்து நடத்தப்பட்டது. இதில், 78 தொகுதிகளில் வென்று பாஜ முதல் முறையாக ஆட்சியை பிடித்தது. இதனால் பிஜூ ஜனதா தளத்தின் 24 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்தது. இதைத் தொடர்ந்து, பிஜூ ஜனதா தள தலைவர் நவீன் பட்நாயக் நேற்று தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். கடந்த 2000ம் ஆண்டு மார்ச் 5ம் தேதி முதல் முறையாக பதவியேற்ற பட்நாயக் தொடர்ந்து 5 முறை சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.