சட்டசபை மோதலுக்கு மத்தியில் ஒடிசாவில் ‘டான்ஸ்’ பார்களுக்கு தடை: மாநில அமைச்சர் அறிவிப்பு

புவனேஸ்வர்: சட்டசபையில் நடந்த மோதலுக்கு மத்தியில் ஒடிசாவில் ‘டான்ஸ்’ பார்களுக்கு தடை விதிக்கப்படும் என்று மாநில அமைச்சர் அறிவித்தார். ஒடிசா சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடரில் கள்ளச்சாராய விவகாரம் மற்றும் மாணவர்களுக்கான தேர்தலை ரத்து செய்தது உள்ளிட்ட பிரச்னைகளை முன்னிறுத்தி, காங்கிரஸ் மற்றும் பிஜூ ஜனதா தளம் ஆகிய எதிர்க்கட்சிகள் நேற்று அமளியில் ஈடுபட்டன. ஒரு கட்டத்தில் எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் சபாநாயகரின் இருக்கையை முற்றுகையிட முயன்றனர். மேஜை மீது ஏறி அட்டகாசத்தில் ஈடுபட முயன்ற அவர்களை, பாதுகாவலர்கள் அப்புறப்படுத்தினர். இதனால், ஒடிசா சட்டசபை போர்க்களம் போல காட்சியளித்தது.

தொடர்ந்து ஒடிசா மாநில வேலைவாய்ப்பு துறை அமைச்சர் பிருத்விராஜ் ஹரிசந்தன் கூறுகையில், ‘மாநிலத்தில் உள்ள அனைத்து டான்ஸ் பார்களும் நிரந்தரமாக மூடப்படும். கடந்த ஆட்சிக்காலத்தில் பள்ளி, கல்லூரிகள், வழிபாட்டு தலங்கள் அருகே செயல்பட்ட சட்டவிரோத மதுபானக் கடைகள் மூடப்படும். விதிகளின்படி நிர்ணயிக்கப்பட்ட இடைவெளியை கடைபிடித்தால் மட்டுமே மதுக்கடைகளை திறக்க அனுமதிக்கப்படும். கள்ளச்சாராய விற்பனையை கட்டுப்படுத்த, சட்டவிரோத மதுபான வியாபாரத்தை தடுப்போம். அரசு நிலத்தை அபகரித்து சட்டவிரோதமாக திறக்கப்படும் மதுக்கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கூறினர்.

Related posts

மதுரையில் தீ விபத்து ஏற்பட்ட மகளிர் விடுதிக் கட்டடத்துக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல்

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

பொங்கல் பண்டிகை: 3 நிமிடங்களில் விற்று தீர்ந்த ரயில் டிக்கெட்டுகள்