ஒடிசாவில் பூரி ஜெகன்நாதர் கோயில் திருவிழா: தேர்களை வடிவமைக்கும் பணி தீவிரம்..!!

ஒடிசா: ஒடிசாவில் பூரி ஜெகன்நாதர் கோயில் திருவிழாவிற்காக தேர்களை வடிவமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஒடிசா மாநிலம் பூரி நகரில் உள்ள உலக புகழ்பெற்ற ஜெகன்நாதர் கோவிலில் அடுத்தமாதம் 20ம் தேதி தேர் திருவிழா நடைபெற உள்ளது. 3 தேர்களில் ஜெகன்நாதர், பாலபத்ரா, தேவி சுபத்ரா ஆகியோர் வளம் வருவதை காண லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த திருவிழாவில் கூடுவது வழக்கம்.

ஒவ்வொரு ஆண்டும் இந்த திருவிழாவிற்காகவே மரத்தினால் ஆன தேர் புதிதாக செய்யப்படுகிறது. அந்த வகையில் அட்சயதிரிதி அன்று தொடங்கப்பட்ட தேர் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மரங்களில் அழகிய சிற்ப வேலைப்பாடுகள் மேற்கொள்ளும் தச்சர்கள் சக்கரங்களை செலுத்தும் பணியிலும் கவனம் செலுத்துகின்றனர். 16 சக்கரங்களை கொண்ட தேரில் ஜெகன்நாதறும், 14 சக்கரங்களை கொண்ட தேரில் பாலபத்திரரும், 12 சக்கரங்களில் அமைக்கப்படும் தேரில் சுபத்ராவும் எழுந்தருள உள்ளனர்.

Related posts

என்ஆர் காங்.- பாஜ கூட்டணியில் விரிசல் முற்றுகிறது: பாஜ எம்எல்ஏ கல்யாணசுந்தரம் பரபரப்பு பேட்டி

3 புதிய குற்றவியல் சட்டங்கள்.. எதற்காக இந்த சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன?: காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி

கடலூரில் பாமக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு..!!