ஒடிசாவில் கட்டுமான பணியின் போது கால்வாய் சரிந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழப்பு

ராயகடா: ஒடிஷா மாநிலத்தில் ராயகடா மாவட்டத்தில் இன்று காலை கட்டுமான பனியின் போது கால்வாயின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் நான்கு குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். குழந்தைகள் கால்வாயின் அடியில் குளித்துக் கொண்டிருந்த போது இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

மழைநீர் கால்வாய்க்கு அடியில் தேங்கிய மழைநீரில் குளித்துக் கொண்டிருந்த போதே இந்த சம்பவம் நிகழ்ந்தது. மேலும் சிலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சபடும் நிலையில், மீட்பு பணிகள் மேற்கொள்ளபட்டுள்ளது.

இடிபாடுகளில் சிக்கி 5 பேர் உயிரிழந்ததற்கு இரங்கல் தெரிவித்துள்ள அம்மாநில முதலமைச்சர், உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்குவதாக அறிவித்தார். விபத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரான ஆம்ஸ்ட்ராங் கொலை: 8 பேர் கைது: மாயாவதி கண்டனம்

தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

ஆம்ஸ்ட்ராங் கொலை: பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கண்டனம்