2வது ஒருநாள் போட்டியில் இன்று இந்தியா – இலங்கை பலப்பரீட்சை: முதல் வெற்றிக்கு முனைப்பு

கொழும்பு: இந்தியா – இலங்கை அணிகள் மோதும் 2வது ஒருநாள் போட்டி, கொழும்புவில் இன்று நடைபெற உள்ளது. இலங்கை சென்றுள்ள இந்திய அணி, சூரியகுமார் தலைமையில் முதலில் விளையாடிய டி20 தொடரை 3-0 என கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்தது.அடுத்து, ரோகித் தலைமையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் மோதி வருகிறது. கொழும்புவில் நேற்று முன்தினம் நடந்த முதல் போட்டி, எத்தரப்புக்கும் வெற்றி தோல்வியின்றி சரிசமனில் முடிந்தது. இலங்கை அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 230 ரன் எடுத்த நிலையில், அடுத்து விளையாடிய இந்தியாவுக்கு அரை சதம் விளாசி நல்ல தொடக்கத்தை தந்தார் ரோகித்.

அடுத்து வந்தவர்கள் பெரிதாகக் கை கொடுக்காவிட்டாலும், கே.எல்.ராகுல் – அக்சர் பொறுப்புடன் விளையாடி வெற்றியை நெருங்கினர். அவர்கள் ஆட்டமிழந்தபோது, இந்தியா 40.5 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 197 ரன் எடுத்திருந்தது. அதன் பிறகு 47.3 ஓவரிலேயே 230 ரன் எடுத்து சமநிலையை எட்டினாலும், தேவையில்லாமல் அடுத்தடுத்து 2 விக்கெட்டை பறிகொடுக்க ஆட்டம் ‘டை’ ஆனது. இரு அணிகளும் 0-0 என சமநிலை வகிக்க, 2வது போட்டி இன்று நடைபெற உள்ளது. இரு அணிகளும் முதல் வெற்றி முனைப்புடன் வரிந்துகட்டுவதால், ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி.

Related posts

அமலாக்கத்துறை சம்மனுக்கு எதிராக மம்தாவின் மருமகன் தொடர்ந்த மனு தள்ளுபடி: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி இறந்த 4 சென்னை இளைஞர்களின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு: ஒருவரின் சடலத்தை தேடும் பணி தீவிரம்

ஆதிதிராவிடர் மாணவர் விடுதி விவகாரம்: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுக்கு அமைச்சர் கயல்விழி பதிலடி