தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு

காஞ்சிபுரம்: மாமல்லபுரம் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. மாமல்லபுரம் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரி மகளிர் மேம்பாட்டு பிரிவு சார்பில், ஊட்டச்சத்து மற்றும் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. கல்லூரி முதல்வர் மனுவேல்ராஜ் தலைமை தாங்கினார். கல்லூரி நிர்வாக இயக்குநர் மணி முன்னிலை வகித்தார்.

சிறப்பு விருந்தினர்களாக மருத்துவர்கள் விஜயலட்சுமி, அனிதா ஆகியோர் கலந்துகொண்டு, பெண்கள் மருத்துவம் மற்றும் மாதவிடாய் வலி நிவாரணத்திற்கான 3 எளிய யோகாசன முறைகள் மற்றும் பெண்களின் சிகிச்சைகள் குறித்தும் விளக்கினர். முன்னதாக, மாணவி ஜெயனி மணி வரவேற்றார். உணவு பாதுகாப்பு துறை மாணவி தீபஜோதி நன்றி கூறினார். நிகழ்ச்சியில், 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

அமெரிக்க பயணம் முடித்து சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு: 19 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி ஒப்பந்தம்; 11,516 பேருக்கு வேலை; தமிழக மக்களுக்கான சாதனை பயணமாக அமைந்தது என பெருமிதம்

புதிய அத்தியாயம்

79 பேர் இடமாற்ற விவகாரம் டான்ஜெட்கோ உத்தரவை எதிர்த்த தொழிற்சங்க வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு