வரும்முன் காப்போம் மருத்துவ முகாமில் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்: எம்எல்ஏ வழங்கினார்

திருவள்ளூர்: பூந்தமல்லி சுகாதார மாவட்டம் சார்பில் கூடப்பாக்கம் ஊராட்சி, மேட்டு கண்டிகை கிராமத்தில் கலைஞரின் வரும்முன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட சுகாதார அலுவலர் பிரபாகரன் தலைமை தாங்கினார். மாவட்டக்குழு துணைத் தலைவரும், ஒன்றிய செயலாளருமான தேசிங்கு, ஒன்றியக்குழு துணைத் தலைவர் பரமேஸ்வரி கந்தன், ஊராட்சி மன்ற தலைவர் ஜெகதா ஜேம்ஸ், ஒன்றிய திமுக நிர்வாகிகள் கந்தன், கட்டதொட்டி குணசேகரன், சாக்ரடீஸ், சுகுமார், பிரவீன்குமார், குணசேகர், கவிஞர் ராஜேஷ், சுப்பிரமணி, துணைத்தலைவர் வடிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார மருத்துவ அலுவலர் பிரதீபா அனைவரையும் வரவேற்றார். பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி முகாமினை தொடங்கி வைத்து கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினார்.

இந்த முகாமில் குடும்ப நல துணை இயக்குனர் சேகர், ஆவடி மாநகராட்சி சுகாதார அலுவலர் ராஜேந்திரன் ஆகியோர் மருத்துவ முகாமின் அவசியம் குறித்து எடுத்துரைத்தனர். இதில் மாவட்ட மலேரியா அலுவலர் (பொ) ஆனந்த், இளநிலை பூச்சியியல் வல்லுனர் ரவிச்சந்திரன், கோடீஸ்வரன், சித்த மருத்துவர் பாண்டியராஜன், கண்ணொளி பரிசோதகர் இளஞ்செழியன், மருந்தாளுநர் கர்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் சுகாதார ஆய்வாளர்கள் வடிவேல், விஜயகுமார் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், பகுதி சுகாதார செவிலியர்கள் முகாமிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தனர். இம்முகாமில் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

Related posts

இலங்கை கடற்படையினர் கைது செய்த ராமேஸ்வரம் மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்த தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

நீலகிரியில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி பெண் உயிரிழப்பு