நூதன முறையில் கடத்திய ரூ.1 கோடி தங்கம் பறிமுதல்

திருச்சி: சிங்கப்பூரில் இருந்து நூதன முறையில் கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடி தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. திருச்சி வரும் விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து அதிகாரிகள் நேற்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சிங்கப்பூரிலிருந்து நேற்று காலை ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்த பயணிகளை வான்நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் பயணி ஒருவர் தனது தொடை பகுதியில், கால் முட்டிக்கு அணிவிக்கும் ‘நீ கேப்’ போன்று அணிந்திருந்தது அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து அவரை தனியாக அழைத்து சென்று அவரது உடைமைகளில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது அந்த பயணி தொடைப்பகுதியில் போட்டிருந்த ‘ நீ கேப்பில்’ பேஸ்ட் வடிவில் தங்கத்தை மறைத்து எடுத்து வந்ததும், மேலும் அவரது உடைமைகளில் துணிகளுக்கு நடுவில் தங்க சங்கிலிகளை மறைத்து எடுத்து வந்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து அந்த பயணியிடம் இருந்து தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இவ்வாறு பேஸ்ட் வடிவிலான 1317.500 கிராம் தங்கம் மற்றும் 106 கிராம் தங்க செயின் என 1 கிலோ 423 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டது.  இதன் சர்வதேச மதிப்பு 1 கோடியே 3 லட்சத்து 13 ஆயிரத்து 257 ரூபாய் என சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதுதொடர்பாக அந்த பயணியிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது

Related posts

சென்னை மெரினாவில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, உடல்நலன் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5-ஆக உயர்வு

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு