நுங்கம்பாக்கம் பள்ளிக்கல்வி வளாகத்தில் பேராசிரியர் சிலை இன்று திறப்பு

சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் பள்ளிக் கல்வி வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேராசிரியர் அன்பழகன் சிலையை, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை திறந்து வைக்கிறார். திமுக பொதுச் செயலாளராக இருந்தவர் பேராசிரியர் க.அன்பழகன். 1962ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும், 1967 முதல் 1971 வரை நாடாளுமன்ற உறுப்பினராகவும், தொடர்ந்து 9 முறை சட்ட மன்ற உறுப்பினராகவும் திறம்பட பணியாற்றினார். கலைஞர் முதல்வராக பொறுப்பேற்ற காலத்தில் மக்கள் நல்வாழ்வு, சமூக நலத்துறை, நிதி மற்றும் கல்வித்துறை அமைச்சராக பணியாற்றினார். அவரின் புகழுக்கு பெருமை சேர்க்கும் விதமாக தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை, நுங்கம்பாக்கம் பேராசிரியர் கல்வி வளாகத்தில் அவரின் சிலை நிறுவப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 10 மணிக்கு சிலையை திறந்து வைக்கிறார்.

Related posts

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்!

காற்று மாசுவால் ஆண்டுதோறும் 10 நகரங்களில் 30 ஆயிரம் பேர் பலி: டெல்லியில் 12,000 பேர் உயிரிழப்பு

திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு