20 ஆண்டுகளாக நொய்யல் ஆற்றை கடக்க பரிசல் பயணம்: பாலம் அமைக்க கோரிக்கை

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தாலுகாவில் அமைந்துள்ள வெங்கலப்பாளையம் பகுதியில் இருந்து ஊத்துக்குளி பகுதிக்கு செல்ல சாலை மார்க்கமாக செல்ல 10 கிலோமீட்டர் தொலைவு ஆகிறது. அதுவே நொய்யல் ஆற்றை கடந்து செல்லும் போது பயண தொலைவு 2 கிலோமீட்டராக குறைகிறது. இதனால் வெங்கலப்பாளையம் பகுதியில் நொய்யல் ஆற்றில் இருகரைகளிலும் கம்பம் நட்டு ஆற்றின் குறுக்கே கம்பி கட்டி அதனை பிடித்தபடி பரிசலில் செல்ல கிராம மக்கள் ஏற்பாடு செய்து உள்ளனர்.

கத்தாங்கன்னி, வயக்காட்டுபுதூர், கணபதி பாளையம், வெங்கலப்பாளையம் என 5 கிராம மக்கள் இந்த பரிசலை இலவசமாக பயன்படுத்தி வருகின்றனர். நொய்யலில் அதிக அளவில் வெள்ளம் வரும் காலங்களில் இந்த பரிசல் பயணத்தையும் பயன்படுத்த முடியாது என்பதால் தங்களுக்கு இப்பகுதியில் பாலம் அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்புடைய 12 இடங்களில் நடந்த சிபிசிஐடி சோதனை நிறைவு!

துரோகத்தின் மொத்த உருவமே அண்ணாமலைதான்: எடப்பாடி பழனிசாமி காட்டம்!

அரசியல் ஆதாயத்துக்காக கொலை நடந்ததற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை: கூடுதல் கமிஷனர் அஸ்ரா கார்க் பேட்டி