மகப்பேறு விடுமுறைக்கு பிறகு, பெண் காவலர்கள் விருப்ப பகுதியிலேயே பணியமர்த்தப்படுவர் என்ற முதல்வர் அறிவிப்புக்கு ஆணை வெளியீடு!!

சென்னை: மகப்பேறு விடுப்பில் உள்ள பெண் காவலர்கள், விடுமுறை  முடிந்த பிறகு தங்களது கணவர் / பெற்றோர் வசிக்கும் பகுதிகளில் பணியமர்த்தப்படுவர் என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்புக்கு ஆணை வெளியீடு செய்யப்பட்டது. சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது;

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல்துறையில் பணிபுரியும் பெண் காவலர்கள் மற்றும் பெண் காவல் அதிகாரிகள் ஒரு ஆண்டு மகப்பேறு விடுமுறை முடிந்து, பணிக்கு திரும்பும் போது அவர்களின் குழந்தைகளை பராமரிப்பதற்கு வசதியாக, அவர்கள் மகப்பேறு விடுமுறையில் இருந்து பணிக்குத் திரும்பிய பிறகு அவர்களுடைய பெற்றோர்களோ அல்லது கணவர் வீட்டைச் சேர்ந்தவர்களோ வசிக்கும் மாவட்டங்களுக்கு அடுத்த 3 ஆண்டுகளுக்கு பணி மாறுதல் வழங்கப்படும் என ஆணை பிறப்பித்துள்ளார்.

அவரது ஆணைக்கிணங்க அரசு உத்தரவினை நிறைவேற்றும் வகையில் சென்னை பெருநகர காவல்துறையில் பணிபுரியும் 19 பெண் காவலர்கள் அவர்களது விருப்பப்படி சென்னை பெருநகர காவலில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கும் பணிமாறுதல் ஆணையினை பெற்று சென்றுள்ளனர். சென்னை போலீஸ் கமிஷனர் அருண், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின ஆணையினை செயல்படுத்தி உள்ளார்.

Related posts

சிவகாசி – சாத்தூர் சாலையில் உள்ள லாரி ஷெட்டில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்து விபத்து

கூட்டுறவு செயலி!

கடன் வாங்கும் முன் கவனியுங்கள்!