தி கேரளா ஸ்டோரி படம் தொடர்பான வழக்கில் மேற்கு வங்க, அரசுக்கு தமிழ்நாடு அரசுக்கு நோட்டீஸ்

டெல்லி: தி கேரளா ஸ்டோரி திரைப்படத்துக்கு தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. சமுதாயங்களுக்கிடையே வெறுப்புணர்வை தூண்டும் வகையில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் உள்ளது.

சர்ச்சைக்குள்ளான தி கேரளா ஸ்டோரி படம் தொடர்பான வழக்கில் மேற்கு வங்க, அரசுக்கு தமிழ்நாடு அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேற்கு வங்கத்தில் தி கேரளா ஸ்டோரி படத்துக்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. மே 17க்குள் மேற்குவங்கம், தமிழ்நாடு அரசுகள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மற்ற மாநிலங்களில் திரையிடும் போது மேற்கு வங்கத்தில் மட்டும் தடை விதித்தது ஏன் என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேற்குவங்க மாநிலம் இந்தியாவின் மற்ற பகுதிகளில் இருந்து வித்தியாசப்பட்டது கிடையாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தி கேரளா ஸ்டோரி படத்திற்கு தடை விதித்தது குறித்து பதில் அளிக்க மேற்கு வங்க மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்பிவைக்கபப்ட்டுள்ளது, வழக்கு அடுத்த வாரத்திற்கு ஒத்திவைக்கபப்ட்டுள்ளது. தமிழகத்தில் கேரளா ஸ்டோரி படத்தை திரையிட திரையரங்குகள் தாக்கப்பட்டது குறித்து பதில் அளிக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

சொந்த மாவட்டத்திலேயே தலைமறைவு வாழ்க்கை வாழும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

காக்கிநாடாவில் பரபரப்பு ஒய்எஸ்ஆர் காங். மாஜி எம்எல்ஏ கட்டிடத்தை இடித்த அதிகாரிகள்

74000 பேர் பனிலிங்க தரிசனம்