மெட்ராஸ் ரேஸ் கிளப் நிர்வாகத்துக்கு நோட்டீஸ்


சென்னை: சென்னை கிண்டியில் மெட்ராஸ் ரேஸ் கிளப் நிர்வாகத்துக்கு மாநகராட்சி நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. மழை நீர் வெளியேற்றம் தொடர்பாக மெட்ராஸ் ரேஸ் கிளப் நிர்வாகம் நாளைக்குள் பதில் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சிறிய கொள்ளளவு கொண்ட மாநகராட்சி வடிகாலில் மழை நீரை வெளியேற்றக் கூடாது. மைதானத்துக்குள்ளேயே புதிய குளத்தை உருவாக்கி அங்கேயே மழை நீரை சேகரிக்க வேண்டும் என்று நோட்டீஸில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் நோட்டீஸ் அனுப்பிய நிலையில் உரிய பதில் இல்லாததால் மீண்டும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. பருவமழை தொடங்குவதற்கு முன்பு மழைநீர் சேகரிப்பதற்கான ஏற்பாட்டை ரேஸ் கோர்ஸ் நிர்வாகம், வளாகத்துக்குள் செய்ய வேண்டும். பருவமழை காலத்தில் ரேஸ் கோர்ஸ் வளாகத்தில் இருந்து மழைநீரை சாலைகளில் வெளியேற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளது.

Related posts

பைக்கில் ‘லிப்ட்’ கேட்ட வாலிபரை தாக்கி நகை, பணம், செல்போன் பறிப்பு: 4 கொள்ளையர்கள் கைது

ஹிஸ்புல்லா தலைவர் கொலையை கண்டித்து ஸ்ரீநகரில் ஷியா பிரிவினர் போராட்டம்: மாஜி முதல்வர் பிரசாரம் ஒத்திவைப்பு

கேரளாவில் கைது செய்யப்பட்ட ரவுடி எஸ்டேட் மணி வேலூர் சிறையில் அடைப்பு