மசோதாக்களை தாமதப்படுத்துவதாக கேரள அரசு வழக்கு: ஆளுநர் செயலர், ஒன்றிய அரசுக்கு நோட்டீஸ்

டெல்லி: மசோதாக்களை தாமதப்படுத்துவதாக கேரள அரசு தொடர்ந்த வழக்கில் ஆளுநர் செயலர், ஒன்றிய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேற்கு வங்க சட்டசபையில் 8 மசோதாக்கள் கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் ஓராண்டுக்கு மேலாக அவற்றை கவர்னர் நிலுவையில் வைத்து உள்ளதாக மாநில அரசு குற்றம்சாட்டியது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்திலும் அம்மாநில அரசு வழக்கு தொடர்ந்தது. அதேபோல், கேரள கவர்னரும் 4 மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் நிலுவையில் வைத்துள்ளதாக அம்மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது; மேற்கு வங்க அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி வாதிட்டார். ஒவ்வொரு முறையும் வழக்கை விசாரிக்கும்போது ஆளுநர்கள் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கின்றனர் என கூறினார். மாநில அரசுகள் நீதிமன்றம் வந்ததும் சில மசோதாக்கள் மட்டுமே நிலுவை என ஆளுநர் தரப்பில் விளக்கம் அழிக்கின்றனர் என வழக்கறிஞர் ஜெய்தீப் வாதிட்டார். கேரள சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அனுப்பிய மசோதாக்களுக்கு 8 மாதமாக ஒப்புதல் அளிக்கவில்லை என வாதிட்டார். மாநிலங்கள் நிறைவேற்றிய மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்புவதையே தாங்கள் எதிர்ப்பதாக வழக்கறிஞர் வேணுகோபால் தெரிவித்தார்.

ஆளுநர்களுக்கு உள்ள குழப்பம் காரணமாகவே மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் நிலுவையில் வைப்பதாகவும் வாதிட்டார். இந்த வழக்கு தொடர்பாக கேரள ஆளுநர் செயலர், ஒன்றிய அரசு 3 வாரத்தில் பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒன்றிய உள்துறை அமைச்சகத்தையும் தேவைப்பட்டால் வழக்கில் சேர்க்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேற்கு வங்க அரசு தொடர்ந்த வழக்கில் அம்மாநில ஆளுநரின் செயலருக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டுள்ளது.

Related posts

திறந்தவெளி அரங்கு உட்பட மதுரை கலைஞர் நூலகத்தில் ரூ12.80 கோடியில் கூடுதல் வசதி: அமைச்சர் எ.வ.வேலு தகவல்

அணையில் மூழ்கி இன்ஜினியர் பலி

போதையில் படுத்திருந்த திருடன் கார் ஏறியதில் தலை நசுங்கி பலி