Nothing நிறுவனம் அறிமுகம் செய்துள்ள Nothing phone 2 ஸ்மார்ட் போன் பல்வேறு புதிய அம்ஸங்களுடன் களமிறக்கம்..!!

லண்டன்: Nothing நிறுவனம் புதிதாக அறிமுகம் செய்துள்ள Nothing phone 2 என்ற ஸ்மார்ட் போன் பல்வேறு புதிய அம்ஸங்களுடன் களமிறங்கியுள்ளது. ஐபோனுக்கே சாவல் விடும் வகையில் அம்சங்கள் உள்ளது. முன் எப்போதும் இல்லாத வகையில் வெளிப்புற தோற்றத்தில் அசத்தலான டிசைனுடன் வெளிவந்த Nothing phone ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் கண்களை ஈர்த்தது. பின்புறத்தில் இருக்கும் எல்.ஈ.டி லைட்கள் அதன் மிக பெரிய விற்பனை புள்ளியாக பார்க்கப்பட்டன.

இந்த நிலையில் லண்டனை சேர்ந்த தலைமையகமாக கொண்ட Nothing நிறுவனம் Nothing போனின் 2வது வர்ஷனை அறிமுகம் செய்துள்ளது. முந்தைய மடலில் இருந்து டிசைனில் மிக பெரிய மாற்றங்கள் இல்லை என்றாலும் இதில் கொடுக்கப்பட்டிருக்கும் அம்சங்கள் ஏராளம் Nothing os2 இயங்குதளத்தில் செயல்படும் இந்த போனில் இரண்டு 50 மெகாபிக்ஸல் கொண்ட பின்புற கேமராக்களும் 32 மெகாபிக்ஸல் செல்பி கேமராவும் இருப்பதோடு 4700 மில்லியம் பாட்டரி இருப்பதால் தற்போது உள்ள உயர்ரக ஸ்மார்ட் போன்களுக்கு இணையாக நாள் முழுவதும் பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய வர்ஷனை விட பிரதியேக அம்சங்கள் அதிகமாக இருந்தாலும் ரூ.15,000 கூடுதலாக அடிப்படை விலை ரூ.45,000 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் ஒரு லட்சம் ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் ஒரு லட்சம் கொடுத்து ஐபோன் வாங்குவதற்கு பதில் ரூ.45,000 அதற்கு நிகரான அம்சங்கள் இருப்பதால் ஐபோனுக்கு போட்டியாக Nothing phone 2 போட்டியாக இருக்கலாம் என இணையவாசிகள் முணுமுணுக்க தொடங்கியுள்ளனர்.

மேலும் Nothing நிறுவனத்தின் உரிமையாளர் கால்பை தான் முன்பு கோ-போவுண்டராக இருந்த நிறுவனமான 1+க்கு சவால் விடும் வகையில் கலர் தீம்களை கஸ்டமைஸ் செய்வது உள்பட பல புதிய அம்சங்களை களமிறக்கி விட்டிருப்பதாகவும் பேசப்படுகிறது. இப்படி இளைஞர்கள் மத்தியில் பெரும் பேசு பொருளாக மாறியுள்ள இந்த Nothing phone 2 இன்னும் இரண்டு , மூன்று மாதங்களில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

இந்திய ஒலிம்பிக் வீரர்களுடன் உரையாடிய பிரதமர் மோடி..!!

சென்னை ரயில்வே கோட்டத்தில் தண்டவாள பராமரிப்பு, பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பாக தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆய்வு

அண்ணாமலை வந்த பிறகு தான் தமிழகத்தில் பாஜக வளர்ந்துவிட்டது போன்ற மாயத்தோற்றம் உருவாக்கி கொண்டிருக்கிறார் : எடப்பாடி பழனிசாமி