நிதிஷ் குமார் அல்ல.. அவரு பல்டி குமார்..

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜவை எதிர்கொள்ள அமைக்கப்பட்ட இந்தியா கூட்டணியில் இருந்து பீகார் முதல்வர் நிதிஷ்குமார் வெளியேறி, மீண்டும் பா.ஜவுடன் கைகோர்த்து உள்ளார். பீகார் சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின் மீதான விவாதத்தில் லாலுபிரசாத் மகன் தேஜஸ்வி இதை கடுமையாக விமர்சித்தார். மேலும் நிதிஷை பச்சோந்தி என்றார். இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷிடம் கேட்ட போது,’ இந்தியா கூட்டணியில் 28 கட்சிகள் இருந்தன. அவற்றில் இரண்டு மட்டுமே வெளியேறியுள்ளன. இரண்டில், ஒருவர் ‘பல்டி குமார்’. பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் ரத்தத்தில் ‘பல்டி அரசியல்’ உள்ளது. அவர் மீண்டும் மீண்டும் பல்டி அடிக்கிறார். நாங்கள் அவரிடம் பல்டி அடிக்கும் முகத்தைத் தவிர வேறு எதையும் எதிர்பார்க்கவில்லை. மற்றொன்று கட்சியான ராஷ்ட்ரிய லோக்தளம் கட்சி முன்னாள் பிரதமர் சரண் சிங்கிற்கு பாரத ரத்னா விருது அறிவித்த பிறகு வேறு சில முடிவுகளை எடுத்தது. இரண்டு கட்சிகள் மட்டுமே வெளியேறியுள்ளன. 26 கட்சிகள் உள்ளன. கூட்டணி வலுவாக உள்ளது’ என்றார்.

Related posts

ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

ரூ2000க்கு மேல் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி?.. நாளை நடக்கும் கூட்டத்தில் முடிவு