மிசாவை கண்ட இயக்கம் திமுக; ஐடி ரெய்டுகளை கண்டு எல்லாம் அஞ்சாது: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

ஈரோடு: மிசாவை கண்ட இயக்கம் தி.மு.க ஐடி ரெய்டுகளை கண்டு எல்லாம் அஞ்சாது என ஈரோட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார். ஈரோடு வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தி.மு.க தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். பின்னர் ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்; நம்முடைய முதலமைச்சர் மக்களுக்காக டெல்லி செல்கிறார். ஆனால் இன்னும் சிலரும் டெல்லி செல்கிறார்கள். இவர்கள் எதற்குச் செல்கிறார்கள். இவர்களது கட்சிக்குள் இருக்கும் கோஷ்டி பிரச்சனைக்காக டெல்லி செல்கிறார்கள்.

அ.தி.மு.கவை பார்த்து நான் கேட்கிறேன், பிரதமரை அடிக்கடி சந்திக்கும் நீங்கள் என்றைக்காவது மக்கள் பிரச்சனைக்காக அவரை சந்திக்கச் சென்று உள்ளீர்களா?. உங்கள் கட்சி பஞ்சாயத்தைப் பேசுவதற்காகவே செல்கிறீர்கள். நம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதற்கும் அஞ்சாதவர். அவர் யாரைக் கைகாட்டுகிறாரோ அவர்தான் அடுத்த பிரதமர். மிசாவை கண்ட இயக்கம் தி.மு.க. இவர்களின் ஐடி ரெய்டுகளை கண்டு எல்லாம் அஞ்சாது. பாசிச அடிமைகளைக் கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது வீட்டுக்கு அனுப்பி வைத்தீர்கள். அதேபோல் பாசிச பா.ஜ.கவையும் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் நீங்கள் வீட்டிற்கு அனுப்ப வேண்டும். நாம் ஆட்சிக்கு வந்த இரண்டு வருடத்தில் நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களுக்காக பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி சாதனைகளைச் செய்துள்ளார் என தெரிவித்துள்ளார்.

Related posts

பைக் ரேஸில் தகராறு: இளைஞருக்கு கத்திக்குத்து

கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரணம் தொடர்பாக நீதிபதி கோகுல்தாஸ் ஆணையத்தின் பணிகள் குறித்து அரசிதழில் வெளியீடு

சென்னையில் தனியார் கார் ஷெட்டில் தீ விபத்து