குப்பை பைகளுடன் 600 பலூன்களை தென்கொரியாவுக்குள் அனுப்பிய வட கொரியா: இரு நாடுகளுக்கிடையே பதற்றம்

சியோல்: வட கொரியா அடிக்கடி அணு ஆயுதங்களை செய்து வருகிறது. இதனால் வட கொரியாவுக்கும் தென் கொரியாவுக்கும் இடையே பல ஆண்டுகளாக பிரச்னை இருந்து வருகிறது. வட கொரியா கடந்த வாரம் ஏவிய உளவு செயற்கைகோள் தோல்வி அடைந்தது. இதனையடுத்து, குறுகிய துார ஏவுகணைகளை சோதித்து பார்த்தது. இந்த சம்பவங்களை கண்டித்து வட கொரிய எல்லை பகுதியில் தென் கொரிய நாட்டினர் துண்டு பிரசுரங்களை வீசி விட்டு சென்றுள்ளனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், குப்பைகளை சுமந்து செல்லும் 150 பலுான்களை தென் கொரியா மீது வட கொரியா ஏவியது.

வெள்ளை நிறத்திலான பலுான்களுடன் இணைக்கப்பட்டிருந்த பைகளில் குப்பைகள், அசுத்தமான கழிவுகள் இருந்தன. இதனால் அவற்றை தொட வேண்டாம் என நாட்டு மக்களை தென் கொரியா எச்சரித்திருந்தது. இந்நிலையில், நேற்றுமுன்தினம் இரவு முதல் மேலும் 600 குப்பை பலூன்களை வட கொரியா அனுப்பியதாக தென் கொரியா தெரிவித்துள்ளது.பலூன்களில் சிகரெட் துண்டுகள், குப்பைகழிவுகள், அழுக்கு துணிகள் மற்றும் பேப்பர்கள் இருந்தன. ஆனால், அதில் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் எந்த பொருட்களும் இல்லை என்றும் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை .

 

Related posts

திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை கடும் வீழ்ச்சி

தொடர் மழையால் அடுத்தடுத்து உடையும் பாலங்கள்

நான் முதல்வன் திட்டத்தில் ஒன்றிய அரசு பணி தேர்வுக்கான பயிற்சி வழங்கும் நிறுவனங்களை தேர்வுசெய்ய டெண்டர்!