ஒரு வரமாக வட மாநில மக்களை வாட்டி வதைக்கும் கடும் குளிர்: வீடு அற்ற சாலையோர மக்கள் உறைய வைக்கும் குளிரால் வேதனை

டெல்லி: டெல்லி, உத்திரபிரேதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் கடும் குளிர் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. அடர்த்தியான பனிமூட்டம் காரணமாக ரயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக டெல்லி, உத்திர பிரதேசத்தில் கடும் குளிர் நிலவி வருகிறது. இந்த நிலையில் பஞ்சாப், ராஜஸ்தான், அரியானா, பீகார், மத்திய பிரதேசத்தில் குளிர் அதிகரித்துள்ளது. இதனால் சாலைகளில் காலை 8 மணிக்கு கூட வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டப் படியே இயக்கப்பட்டன. டெல்லியில் ஒருவார காலமாக நிலவி வரும் பனிமூட்டம் காரணமாக தொடர்ந்து 4 நாட்களாக ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

நேற்று 26 ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன. இன்றும் ரயில் சேவை பழைய நிலையை அடையவில்லை. டெல்லியில் விமானங்கள் இயக்கத்திலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. அங்கு காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை 6 முதல் 9 டிகிரி பதிவாகியுள்ளது. கடும்குளிர் மற்றும் அடர்த்தியான மூடுபனி காரணமாக அரியானா, பஞ்சாப் மட்டுமல்லாது வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுரா மாநிலமும் பாதிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப், அரியானாவில் நாளை வரை கடும்குளிர் நிலவும் என்று கூறப்பட்டுள்ளது. சாலையோரங்களில் வசிப்போர் தீமூட்டி பனிபொழிவில் இருந்து தங்களை காத்து கொள்கின்றனர். உறையவைக்கும் குளிர் தொடரும் என்பதால் மக்கள் கவலை அடைந்துள்ளனர்.

Related posts

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு

சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை காண்பதற்காக புறநகர் ரயில்களில் 3 லட்சம் பேர் பயணம்