வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை விழுப்புரத்தில் சீரமைப்பு பணிகள் தீவிரம்: ஆட்சியர் பழனி நேரில் பார்வையிட்டார்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழையினை எதிர்கொள்ளும் விதமாக முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து மாவட்ட அளவிலான அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில், வடகிழக்கு பருவமழையினை எதிர்கொள்ளும் பொருட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் வடகிழக்கு பருவமழையினை எதிர்கொள்ளும் விதமாக துறை சார்ந்த அலுவலர்கள் மூலம் அனைத்து முன்னேற்பாடு பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடலோர பகுதிகளில் அனைத்து முன்னேற்பாடாக புயல் பாதுகாப்பு மையங்களில் பொதுமக்கள் தங்குவதற்கான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தற்காலிக பாதுகாப்பு மையங்கள் அமைத்திடும் பொருட்டு பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் மணல் மூட்டைகள், பொக்லைன் இயந்திரங்கள், மரம் அறுக்கும் கருவிகள், ஜெனரேட்டர் வசதி, மின்கம்பங்கள் உள்ளிட்டவைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த பருவமழையின்போது பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளான மரக்காணம் பகுதிகளில் இரண்டு வாரங்களுக்கு முன்பு ஆய்வு மேற்கொண்டு துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தியதின் அடிப்படையில் ஏரிக்கரைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், கால்வாய்கள் சீரமைக்கப்பட்டுள்ளது. முன்னதாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சியர் பழனி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு