11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம்

சென்னை: தமிழ்நாட்டில் வட கிழக்கு பருவமழை தற்போது தீவிரம் அடையத் தொடங்கியுள்ளது. அதன் காரணமாக தென் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், வட தமிழக கடலோர மாவட்டங்களிலும் அனேக இடங்்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக தென்காசியில் 90மிமீ மழை பெய்துள்ளது.
இந்நிலையில், வட கிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் தீவிரம் அடைந்துள்ளது. மேலும், இலங்கை மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

அதேபோல தெற்கு வங்கக் கடல் பகுதியலும் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யும். 6ம் தேதி வரை இதேநிலை நீடிக்கும். சென்னையில் பொதுவாக மேகமூட்டம் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

Related posts

இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது

ரூ.27 கோடி லஞ்சம்: முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீது வழக்குப்பதிவு

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்