வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு சென்னையில் 48,664 மரங்களின் கிளைகள் அகற்றம்: மாநகராட்சி அறிக்கை

சென்னை: வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு சென்னையில் 48,664 மரங்களின் கிளைகள் அகற்றபட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்; வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தும் நிலையில் உள்ள மரங்களின் கிளைகளை கத்தரித்து அகற்றும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில், பெருநகர சென்னை மாநகராட்சியின் மண்டலங்கள் 1 முதல் 15 வரையில், மழைக்காலத்திற்கு முன்னதாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 01.07.2024 முதல் 14.10.2024 வரை 45,956 மரங்களின் கிளைகளும், 15.10.2024 முதல் 19.10.2024 வரை 2,708 மரங்களின் கிளைகளும் என மொத்தம் 48,664 மரங்களின் கிளைகள் கத்தரித்து அகற்றப்பட்டுள்ளது. இந்தப் பணிகளுக்காக 262 மர அறுவை இயந்திரங்கள், 216 டெலோஸ்கோபிக் மர அறுவை இயந்திரங்கள், வட்டாரத்திற்கு தலா 3 ஹைட்ராலிக் மர அறுவை இயந்திரங்கள் என 9 ஹைட்ராலிக் மர அறுவை இயந்திரங்கள் மற்றும் 2 ஹைட்ராலிக் ஏணிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

அதன் விவரம்:

Related posts

ஊட்டி தாவரவியல் பூங்காவில் பூத்து குலுங்கும் குட்டை ரக டேலியா, சூரியகாந்தி மலர்கள்: சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு

மத்திய கிழக்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றது: வானிலை ஆய்வு மையம்

வேலூர் அடுத்த பொய்கை சந்தையில் சண்டை கோழிகள் ரூ5 ஆயிரம் வரை விற்பனை