வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையிலும் தடையின்றி மின்விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது: அமைச்சர் தங்கம் தென்னரசு

சென்னை: வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையிலும் தடையின்றி மின்விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் மின்சாரத்துறை சார்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு காணொளி வாயிலாக ஆய்வு கூட்டம் மேற்கொண்டார்.

வடகிழக்கு பருவமழை 21.10.2023ல் தொடங்கியதிலிருந்து தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை மற்றும் மிக கனமழை ஏற்படக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டிருந்ததை தொடர்ந்து, தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் மின்சாரத்துறை சார்பாக மேற்கொள்ளப்பட்டுவரும் முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வு கூட்டத்தில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ள 9 மாவட்டங்களில் தலைமை பொறியாளர்களுடன் மின்விநியோகம் வழங்க எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன என்பது குறித்தும் இந்த ஆய்வு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. மேலும் மின் தளவாட பொருட்களுடன் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள மின்வாரிய பணியாளர்கள் தயார் நிலையில் இருக்கவும் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் கனமழையால் சேதமடைந்த 169 மின் கம்பங்கள், 72 மின் மாற்றிகள் உடனடியாக சீரமைக்கப்பட்டுள்ளது. மிக கனமழை காரணமாக ஏற்படும் மின்விநியோக பாதிப்புகளை சரி செய்ய ரூ.4.4 கோடி வழங்க அமைச்சர் தங்கம் தென்னரசு உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 44 மின்பகிர்மான வட்டங்களுக்கும் ரூ.10 லட்சம் வீதம் வழங்கப்படும் என்றும் மின்விநியோக பாதிப்பு தொடர்பான புகார்களை 94987 94987 6760 எண்ணில் தெரிவிக்கலாம் எனவும் அவர் கூறினார். மழை காலங்களில் பொதுமக்கள் மின்சாதனங்களை மிகுந்த எச்சரிக்கையுடன் கையாளுமாறும், அறுந்து கிடைக்கும் மின்கம்பங்களிடையே செல்ல வேண்டாம் எனவும் இந்த கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

 

Related posts

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கில் ஜார்க்கண்டில் மேலும் 2 பேரை சி.பி.ஐ. கைது செய்துள்ளது

மதுவிலக்கு திருத்தச்சட்டம் நாளை சட்டப்பேரவையில் அறிமுகம் செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

மதுவிலக்கு திருத்தச்சட்டம் நாளை சட்டப்பேரவையில் அறிமுகம் செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு