வடசென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

சென்னை: மீஞ்சூர் அடுத்த வடசென்னை அனல்மின் நிலையத்தில் உள்ள கொதிகலனில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக மீண்டும், 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அத்திப்பட்டில் உள்ள வடசென்னை அனல்மின் நிலையத்தின், முதலாவது நிலையில் மூன்று அலகுகளில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தியும், 2வது நிலையில் இரண்டு அலகுகளில் தலா 600 மெகாவாட் மின் உற்பத்தி என மொத்தம் 1,830 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாகிறது. இந்நிலையில், 2வது நிலையின் 2வது அலகில் கொதிகலனில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக மீண்டும், 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணிகளில் மின் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Related posts

அனைத்து கலை, அறிவியல் கல்லூரிகளிலும் ஒரே நேரத்தில் தேர்வுகள் துவங்கி, முடிவுகளும் வெளியாகும்: கல்லூரி கல்வி இயக்குநர் அறிவிப்பு

உத்தரபிரதேச மாநில தோல்விக்கு மோடி, யோகியை குறை சொல்லாதீங்க!: அகங்காரம் கூடாது என மாஜி முதல்வர் அறிவுரை

மதுபான மாபியா செய்தி வெளியிட்ட டிவி சேனல் நிருபர் மர்ம மரணம்?: பிரியங்கா காந்தி கண்டனம்