வடசென்னை, வல்லூர் அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி தொடக்கம்

சென்னை: அத்திப்பட்டு வடசென்னை அனல் மின் நிலையத்தில் முதலாவது நிலையில் 3 அலகுகளில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தியும், 2வது நிலையில் 2 அலகுகளில் தலா 600 மெகாவாட் மின் உற்பத்தி என மொத்தம் 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், 2வது நிலையின் 2வது அலகில் கொதிகலன் குழாயில் கசிவு ஏற்பட்டு 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டிருந்தது. தற்போது, கொதிகலன் பழுது சரிசெய்யப்பட்டு மீண்டும் 600 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.

இதேபோல், 3 அலகுகளில் 1500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வரும் வல்லூர் அனல் மின் நிலையத்தில் 1வது அலகில் டர்பனில் பழுது ஏற்பட்டு 500 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. தற்போது பழுது சரிசெய்யப்பட்டு மீண்டும் 500 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கியது. ஒரே நேரத்தில் வடசென்னை மற்றும் வல்லூர் அனல் மின் நிலையங்களில் ஏற்பட்ட பழுது சரிசெய்யப்பட்டு மீண்டும் 1100 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கி உள்ளது.

Related posts

திரவுபதியம்மன் கோயிலுக்கு சொந்தமான ₹35 லட்சம் மதிப்புள்ள வீடு மீட்பு அறநிலையதுறை அதிகாரிகள் சீல் வைத்தனர் வேலூர் வேலப்பாடியில் நீதிமன்ற உத்தரவின்பேரில்

வரத்து அதிகரிப்பால் பீன்ஸ் விலையில் சரிவு வேலூர் நேதாஜி மார்க்கெட்டில்

ஐஎப்எஸ் நிதிநிறுவன ஏஜென்ட் தூக்கிட்டு தற்கொலை வேலூரில் நிதி நிறுவன மோசடியால் விரக்தி