ராணுவத்தில் ஒழுங்கின்மைக்கு இடம் கிடையாது: உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து

புதுடெல்லி: ராணுவத்தில் ஒழுங்கின்மைக்கு இடம் கிடையாது என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.ராணுவ மெக்கானிக்கல் பிரிவில் டிரைவராக பணியாற்றி வந்த ஒருவருக்கு கடந்த 1998ம் ஆண்டு நவ.8ம் தேதியில் இருந்து டிச.16ம் தேதி வரை 39 நாட்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டது.பிறகு, 1998 டிச.17 முதல் 1999 ஜன.15ம் தேதி வரை கருணை அடிப்படையில் மேலும் 39 நாள் விடுமுறை அளிக்கப்பட்டது. விடுமுறை முடிந்தும் அவர் மீண்டும் பணிக்கு திரும்பவில்லை. 108 நாள்கள் பணிக்கு வராததால் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க ராணுவம் உத்தரவிட்டது. தன்னுடைய மனைவிக்கு உடல்நிலை சரியில்லை. அவரை கவனித்து கொள்வதற்கும் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிப்பதற்காகவும் விடுமுறை தேவைப்படுகிறது என கூறியுள்ளார்.

ஆனால் பணிக்கு வராததால் அவரை பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார். இதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள் ஹிமா கோலி,ராஜேஷ் பிண்டால் அடங்கிய அமர்வு,‘‘ தனது மனைவியின் உடல்நிலை என்று கூறிய ராணுவ ஊழியர் அதற்கான ஆவணங்களை சமர்பிக்கவில்லை. அவருடைய கோரிக்கையை ஏற்றால் அது ஒரு தவறான முன்னுதாரணமாகி விடும். ஒழுக்கம் என்பது ராணுவத்தின் நிலையான முத்திரை ஆகும். அதில் எந்த சமரசமும் செய்யக்கூடாது.ராணுவத்தில் ஒழுங்கின்மைக்கு இடம் கிடையாது’’ என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

Related posts

2026 சட்டமன்ற தேர்தல் குறித்து திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை கூட்டம்: சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது

மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான 3 ஆண்டுகால ஆட்சியில் 46 புதிதாக திறக்கப்பட்ட தொழிற்சாலைகள் 1.40 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள்