கனமழையால் மும்பையில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மும்பை: மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மும்பை, புனேவில் கனமழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் புறநகர் ரயில் சேவை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. ராய்கட், பால்கர், ரத்னகிரி மற்றும் சிந்துதுர்க் மாவட்டங்களுக்கு இன்றும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மும்பை விமான நிலையத்திலிருந்து விமானங்கள் புறப்படுவதிலும், வந்து சேர்வதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. மக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்; கடற்கரைகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனமழையால் இன்று நடைபெறுவதாக இருந்த தேர்வுகளை மும்பை பல்கலைக்கழகம் ஒத்திவைத்துள்ளது.

Related posts

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேமுதிகவுக்கு தொடர்பா?: பிரேமலதா கண்டனம்

நீட்தேர்வு முடிவுகளில் பல்வேறு குளறுபடிகள் அம்பலம்: செல்வப்பெருந்தகை அறிக்கை

இந்தியாவின் முன்னாள் குடியரசு துணைத்தலைவர் வெங்கய்யா நாயுடுவின் விழாவை புறக்கணித்த அண்ணாமலை