வேட்புமனு தாக்கலில் மோதல்: அதிமுக, பாஜவினர் மீது வழக்கு

ஊட்டி: நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 19ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20ம் துவங்கியது. நேற்று முன்தினமே அதிமுக, பாஜ, மற்றும் சுயேட்சைகள் பலரும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.  நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வன், பாஜ சார்பில் போட்டியிடும் ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். ஒரே நேரத்தில் இருதரப்பினரும் ஒரே இடத்தில் குவிந்துஊர்வலம் செல்ல முயன்று போட்டி கோஷம் போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டதால், லேசான தடியாடி நடத்தினர். இருதரப்பினரையும் போலீசார் அப்புறப்படுத்தினர். உடனே இருகட்சியினரும் மறியலில் ஈடுபட்டனர். எஸ்பி பேச்சுவார்த்தைக்கு பின் அனைவரும் கலைந்து சென்றனர். இந்நிலையில், தேர்தல் விதிமுறைகளை மீறியதாக அதிமுக மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் உட்பட மற்றும் பாஜ மாவட்ட தலைவர் மோகன்ராஜ் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

Related posts

கள்ளச்சாராயம் விற்பனை; அதிக வழக்குகள் பதிவாகும் மாவட்டங்களில் கூடுதல் காவலர்களை நியமிக்கலாம்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!

மருதாநதி, குண்டேரிப்பள்ளம் நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவு