சீட்டே வேண்டாம் என கதறல்: ப்ளீஸ் என்னைய விட்டுடுங்க சாமி… வீட்டிலேயே முடங்கி கிடக்கும் புதுவை அமைச்சர்

வரும் நாடாளுமன்ற தேர்தலில் புதுச்சேரியில் பாஜ போட்டியிட உள்ளது. பாஜ சார்பில் வேட்பாளராக உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், எம்எல்ஏக்கள் கல்யாணசுந்தரம், ராமலிங்கம் மற்றும் ஆதரவு எம்எல்ஏ சிவசங்கரன், நிர்மலா சீதாராமன் ஆகிய 5 பேர் முன்மொழியப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் புதுவை மக்களுக்கு நன்கு அறிமுகமான அமைச்சர் நமச்சிவாயத்தையே வேட்பாளராக அறிவிக்க பாஜ மேலிடம் முடிவு செய்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால், அமைச்சர் நமச்சிவாயத்துக்கு தேர்தலில் போட்டியிட விருப்பமில்லை என மேலிடத்துக்கு தெரிவித்து உள்ளார். பாஜவுக்கு வெற்றி வாய்ப்பு இல்லாததால், மக்களவை தேர்தலில் தோல்வியடைந்தால் மாநிலத்தில் அரசியல் எதிர்காலம் இல்லாமல் போய்விடும் என்று அமைச்ச நமச்சிவாயம் நினைக்கிறார். ஆனால் மேலிடம் தொடர்ந்து அழுத்தம் தருவதால் அமைச்சர் நமச்சிவாயம் அப்செட்டாகி, கடந்த 27ம் தேதியில் இருந்து அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் வீட்டிலேயே முடங்கி உள்ளாராம். மேலிடம் கொடுக்க அழுத்ததை நெருங்கிய வட்டாரத்தில் சொல்லி கதறி வருகிறார்.

Related posts

தனியார் மருத்துவமனையில் நடந்த அறுவை சிகிச்சையில் பங்கேற்ற அரசு மருத்துவரை பணிநீக்கம் செய்யாதது ஏன் : உயர்நீதிமன்றம் கேள்வி

ஆட்சி அமைக்க ஹேமந்த் சோரனுக்கு ஆளுநர் அழைப்பு

நீலகிரி, கோவையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்