நீர்வரத்து இல்லாததால் சுருளி அருவி ‘டல்’

கம்பம் : கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் நீர்வரத்து இல்லாதால் வறண்டு வெறும் பாறையாக காட்சியளிக்கிறது. இதனால் குளிக்க வந்த சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.கம்பம் அருகே உள்ள சுருளி அருவி சுற்றுலாத் தலமாகவும் ஆன்மீக தலமாகவும் விளங்கி வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அண்டை மாநிலங்களில் இருந்தும் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் சுருளி அருவிக்கு வருகை தருகின்றனர்.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவுக்கு பெய்யாததால் சுருளி அருவி நீர்ப்பிடிப்பு பகுதிகளான அரிசி பாறை, ஈத்தக்காடு, தூவானம் அணை ஆகிய வனப்பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டு நீர்வரத்து முற்றிலுமாக நின்று சுருளி அருவி வெறும் பாறையாக காட்சியளிக்கின்றது. இதன் காரணமாக சுருளி அருவிக்கு வருகை புரியும் சுற்றுலாப் பயணிகளை வனத்துறையினர் அருவியில் நீர்வரத்து இல்லாததால் திருப்பி அனுப்பி வருகின்றனர். இதனால் சுற்றுலா பயணிகள் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.

Related posts

அதிமுக நிர்வாகி கொலை வழக்கில் 7 பேர் கைது

பார்பி பொம்மையின் 65ஆண்டு கால மாற்றங்கள் குறித்த கண்காட்சி.. லண்டனில் நாளை முதல் 25-ம் தேதி வரை நடைபெறும்

மராட்டியம், உ.பி., தெலங்கானா, குஜராத் சோதனையில் ரூ.327 கோடி மதிப்பு போதைப்பொருள் பறிமுதல்: 15 பேரை கைது செய்து குற்றப்பிரிவு போலீசார் விசாரணை