நெல்லை மேயர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்

நெல்லை: நெல்லை மாநகராட்சியில் மொத்தம் 55 கவுன்சிலர்கள் உள்ளனர். இதில் 4 பேர் அதிமுகவைச் சேர்ந்தவர்கள். மீதமுள்ள 51 கவுன்சிலர்களும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளைச் சார்ந்தவர்கள் ஆவர். நெல்லை மாநகராட்சி மேயரான பி.எம்.சரவணன் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை 38 திமுக கவுன்சிலர்கள் கையெழுத்திட்டு கடந்த 6ம் தேதி மாநகராட்சி கமிஷனர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவிடம் ஒப்படைத்தனர்.

கவுன்சிலர்களின் கடிதத்தில் போலி கையெழுத்துகள் இருப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் கடந்த சில நாட்களாக கவுன்சிலர்களை தனித்தனியாக அழைத்து கமிஷனர் விசாரணை நடத்தினார். இந்நிலையில் மேயர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது வரும் ஜன.12ம் தேதி விவாதமும், வாக்கெடுப்பும் நடைபெறும் என மாநகராட்சி கமிஷனர் அறிவித்துள்ளார்.

Related posts

பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூடிய கலைஞர் நூற்றாண்டு பூங்கா நாளை திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்கள்!

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த நபர் உயிரிழப்பு

மனைவிக்கு டார்ச்சர் கணவன் அதிரடி கைது