என்எல்சி சுரங்கத்தில் தொழிலாளி பலி உறவினர்கள் மறியல்

நெய்வேலி: நெய்வேலியை அடுத்த ஊமங்கலம் ஊராட்சி புது இளவரசன் பட்டு பகுதியை சேர்ந்தவர் அன்பழகன் (51). என்எல்சி நிலக்கரி சுரங்கம் 2ல் 30 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை 6 மணிக்கு முதற்கட்ட பணிக்கு சென்றவர் காலை 8.30 மணி அளவில் நிலக்கரி வெட்டுவதற்கு மேல் மண்ணை நீக்கி எடுத்து செல்லப்படும் டிரைவர்ட் கன்வேயர் பெல்ட்டில் வேலை செய்துள்ளார். அப்போது ரோலர் பெல்ட்டில் மாட்டி உயிரிழந்ததாக தெரிகிறது. தகவலறிந்த அன்பழகனின் உறவினர்கள், தொழிற்சங்கத்தினர் நுழைவாயில் முன் திரண்டனர். உடலை எடுத்த செல்லவிடாமல் மறியலில் ஈடுபட்டனர். என்எல்சி உயர் அதிகாரிகள் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதன்பின் கலைந்து சென்றனர்.

Related posts

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு

சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை காண்பதற்காக புறநகர் ரயில்களில் 3 லட்சம் பேர் பயணம்