என்எல்சியில் தொடர்ச்சியான விபத்துகளில் தொழிலாளர்கள் உயிரிழப்பதை எப்படி எடுத்துக்கொள்வது?: ஐகோர்ட் கேள்வி

சென்னை: என்எல்சி சுரங்கத்தில் தொடர்ந்து நடக்கும் விபத்துகள் மூலம் தொழிலாளர்கள் உயிரிழப்பதை எவ்வாறு எடுத்துக்கொள்வது? என ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. 2020-ல் பாய்லர் வெடித்த விபத்தில் 15 தொழிலாளர்கள் பலியானது தொடர்பான வழக்கில் முன்ஜாமின் கோரி என்எல்சி அதிகாரிகள் மனுத்தாக்கல் செய்திருந்தனர். சுரங்க விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு இழப்பீடோ, கருணை தொகையோ தரவில்லை என தொழிலாளர்கள் குடும்பத்தினர் தெரிவித்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் உரிய இழப்பீடு வழங்கப்படுகிறது. உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு வேலைவாய்ப்பும் வழங்கப்படுகிறது என என்.எல்.சி. தரப்பு வழக்கறிஞர் கூறினார்.

Related posts

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்!

காற்று மாசுவால் ஆண்டுதோறும் 10 நகரங்களில் 30 ஆயிரம் பேர் பலி: டெல்லியில் 12,000 பேர் உயிரிழப்பு

திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு