நிதி ஆயோக் அமைப்பு வெளியிட்டுள்ள ஏற்றுமதிக்கான தயார்நிலைக் குறியீட்டில் தமிழ்நாடு முதலிடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

சென்னை: நிதி ஆயோக் அமைப்பு வெளியிட்டுள்ள ஏற்றுமதிக்கான தயார்நிலைக் குறியீட்டில் தமிழ்நாடு முதலிடம் பிடித்ததையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘நிதி ஆயோக் அமைப்பு வெளியிட்டுள்ள ஏற்றுமதிக்கான தயார்நிலைக் குறியீட்டில் தமிழ்நாடு முதலிடம் பிடித்திருக்கும் சிறப்பான சாதனை என்பது மாநிலத் தொழிற்சூழலின் வலிமையையும், நமது திராவிட மாடல் அரசின் தொலைநோக்கிலான கொள்கைகளையும் பறைசாற்றுவதாக அமைந்துள்ளது. இதற்குப் பங்காற்றிய அனைவரின் கடின உழைப்புக்கும் அர்ப்பணிப்புக்கும் பாராட்டுகள். வளர்ச்சிக்கும் வளமைக்கும் உகந்த சூழலை வளர்த்தெடுப்பதில் எப்போதும் போல உறுதியாக உள்ளோம்’ என்று கூறியுள்ளார்.

Related posts

சென்னையில் ஜூலை 7இல் மகளிருக்கான கார் பேரணி..!!

ஜிம்பாப்வே டி20: இந்திய அணி வீரர்கள் மாற்றம்

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று முதல் 8ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்: வானிலை மையம்