நிசான் எக்ஸ் டிரையல் என்ற எஸ்யுவியை இந்தியச் சந்தையில் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த 4ம் தலைமுறை கார், 2021ம் ஆண்டு முதல் சர்வதேச சந்தையில் உள்ளது. இந்தியாவில் இந்த கார் 1.5 லிட்டர் 3 சிலிண்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் கொண்டதாக இருக்கும். இது அதிகபட்சமாக 201 பிஎச்பி பவரையும், 305 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் என நிறுவன வட்டாரத்தில் கூறப்படுகிறது.