நிசான் எக்ஸ்-டிரெய்ல்

நிசான் இந்தியா நிறுவனம் எக்ஸ் டிரெயில் என்ற எஸ்யுவியை அறிமுகம் செய்துள்ளது. இதில் 1.5 லிட்டர் 3 சிலிண்டர் கொண்ட டர்போ பெட்ரோல் இன்ஜின், சிவிடி கியர் பாக்ஸ் இடம் பெற்றுள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 161 பிஎச்பி பவரையும் 300 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். மைல்டு ஹைபிரிட் கார் என்பதால், எரிபொருள் சிக்கனத்தை வழங்கும். இந்தக் காரில் 8 அங்குல இன்போடெயின்மென்ட் சிஸ்டம், டூயல் ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், 12 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 360 டிகிரி சரவுண்ட் கேமரா, வயர்லெஸ் சார்ஜர், பனோரமிக் சன்ரூப் ஆகிய அம்சங்களும் இடம் பெற்றுள்ளன.

அதேநேரத்தில் அடாஸ் தொழில்நுட்பம் உள்ளிட்ட அம்சங்கள் இதில் இடம் பெறவில்லை. பியர்ல் ஒயிட், சில்வர், டயமண்ட் பிளாக் ஆகிய மூன்று வண்ணங்களில் கிடைக்கும். ஷோரூம் விலை சுமார் ரூ.49.92 லட்சம். இந்தியாவில் உற்பத்தி செய்யாமல் முழுமையான காராக இறக்குமதி செய்து விற்பனை செய்யப்படுவதால் இதன் விலை அதிகமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இருப்பினும் டொயோட்டா பார்ச்சூனர், எம்ஜி குளோஸ்டர், ஸ்கோடா குஷக், ஹூண்டாய் டுக்சான் மற்றும் ஜீப் மெரிடியன் ஆகியவற்றுக்குப் போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

நாகர்கோவில் ரயில் நிலையத்தில் மேற்கூரை இல்லாத வாகன பார்க்கிங்

முதலமைச்சர் நீர்நிலை பாதுகாவலர் விருது வழங்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!!

குமரி: சுற்றுலா படகு சேவை தாமதமாக தொடங்கியது