நீலகிரியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த அரசு பேருந்து ஓட்டுநர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: நீலகிரியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த அரசு பேருந்து ஓட்டுநர் பிரதாப் (42) குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; நீலகிரி மாவட்டம், கோத்தகிரி வட்டம், கெங்கரை-1 கிராமத்தில் இன்று காலை சுமார் 06.10 மணியளவில் கூட்டாடாவிலிருந்து கோத்தகிரி நோக்கி நான்கு பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்து கோவில்மட்டம் என்னும் இடத்தில் வந்துகொண்டிருந்தபோது உயர் மின் அழுத்தக் கம்பி பேருந்தின்மீது உரசிய விபத்தில் நான்கு பயணிகள் மற்றும் ஓட்டுநர் பேருந்துப் படிக்கெட்டின் வழியாக கீழே இறங்கி தப்பித்த நிலையில் எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி அரசுப் பேருந்து ஓட்டுநர் பிரதாப் (வயது 42) த/பெ. தேவராஜ் என்பவர் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியை கேட்டு மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

இவ்விபத்தில், உயிரிழந்த அரசுப் பேருந்து ஒட்டுநர் பிரதாப் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு 3 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Related posts

மாவட்ட வாரியாக பள்ளிக்கல்வித்துறை செயல்பாடுகளை கண்காணிக்க குழு

கடந்த 3 ஆண்டுகளில் மருத்துவத்துறை 545 விருதுகள் பெற்று சாதனை: தமிழக அரசு

வங்கதேச அணிக்கு 515 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி