நீலகிரியில் பாஜ நிற்பது உறுதி: தேமுதிகவுடன் கூட்டணி விரைவில் முடிந்து விடும்; எல்.முருகன் கணிப்பு

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் அம்ருத் பாரத் ஸ்டேஷன் திட்டத்தின் கீழ் ரூ.14.81 கோடியில் ரயில் நிலைய வளர்ச்சித்திட்ட பணிகளை ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் துவக்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமாகாவிடம் தேர்தல் பேச்சுவார்த்தை முடிவு பெற்றுள்ளது. தேமுதிகவுடன் அகில இந்திய அளவில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் பேச்சுவார்த்தை முடிந்து விடும். எல்லா கட்சியிலிருந்தும் பாஜவிற்கு வந்து இணைந்து கொண்டுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடியால் கவரப்பட்டு, மோடியின் வளர்ச்சி அரசியல், இந்தியா பெற்று வரும் அசுர வளர்ச்சியை கண்டு பாஜவில் இணைந்து வருகிறார்கள். நீலகிரி நாடாளுமன்ற தொகுதியை பொறுத்தமட்டில் பாஜ வேட்பாளர் நிற்பது உறுதி. வேட்பாளர் யார்? என்பது குறித்து கட்சி தலைமை அறிவிப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

சர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு