நீலகிரியில் மலைப்பாங்கான பகுதிகளில் விவசாயம் மும்முரம்

ஊட்டி : நீலகிரியில் அவ்வப்போது மழை பெய்து வரும் நிலையில் மலைப்பாங்கான பகுதிகளிலும் விவசாயம் மேற்கொள் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் ஜூன் மாதம் துவங்கி இரு மாதங்கள் தென்மேற்கு பருமழை பெய்யும். அதேபோல், அக்டோர்பர் மாதம் துவங்கி இரு மாதங்கள் வடகிழக்கு பருவமழை பெய்யும். இச்சமயங்களில் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீரோடைகளிலும், கிணறுகள் மற்றும் குளங்களில் தண்ணீர் அதிகளவு காணப்படும்.

இதனை பயன்படுத்தி விவசாயிகள் மலை காய்கறி விவசாயிகள் மேற்கொள்வது வாடிக்கை. குறிப்பாக, மலைப்பாங்கான பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களிலும் மழை நீரை கொண்டும், மோட்டார் பயன்படுத்தி தண்ணீர் பாய்ச்சி விவசாயம் மே்கொள்வது வாடிக்கை.இதனால், விவசாயிகளுக்கு அதிக மகசூல் கிடைக்கும். குறிப்பாக, கேரட் மற்றும் உருளைக்கிழங்கு போன்ற பயிர்கள் அதிகளவு பயிரிடப்படும். இந்நிலையில், இம்முறை எதிர்பார்த்த அளவிற்கு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை பெய்யவில்லை.

எனினும், அவ்வப்போது நீலகிரி மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது. கடந்த மாதம் சில நாட்கள் கன மழை பெய்தது. மேலும், மிக்ஜாம் புயலின் போதும நீலகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. மேலும், தற்போதும் ஊட்டியில் மழை பெய்து வருகிறது. இதனால், தற்போது அனைத்து பகுதிகளிலும் மலைப்பாங்கான பகுதிகளில் விவசாயிகள் பயிர் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். ஊட்டி அருகேயுள்ள எமரால்டு, நஞ்சநாடு, இத்தலார் போன்ற பகுதிகளில் தற்போது மலைப்பாங்கான பகுதிகளில் பயிர் செய்ய விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Related posts

பைக்கில் குட்கா கடத்திய வாலிபர் கைது: 15 கிலோ, பைக் பறிமுதல்

பேப்பர் கிடங்கில் தீ விபத்து

கீழ்முதலம்பேடு ஊராட்சி அலுவலகத்தின் பழுதடைந்த கட்டிடம் சீரமைக்கப்படுமா? பொதுமக்கள் அச்சம்