நீலகிரியில் கனமழை எச்சரிக்கை: பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்

நீலகிரி: நீலகிரியில் கனமழை பெய்து வருவதால் ஆற்றங்கரையோரங்களில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. கூடலூர், பந்தலூர், தேவாலா, நாடுகாணி, சேரம்பாடி, தொரப்பள்ளி, முதுமலை உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது. கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் இடைவிடாது கனமழை பெய்து வருவதால் ஆறுகள், ஓடைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தாழ்வான இடங்களில் வீடுகளை மழை நீர் சூழந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Related posts

டி20 உலக கோப்பை இறுதி போட்டியை மறக்க முடியல: தென் ஆப்பிரிக்க வீரர் வேதனை

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க போலி தரிசன டிக்கெட்டுகள்: தேவஸ்தானம் எச்சரிக்கை

வீட்டின் கழிவறையில் அடைத்து வைத்து 6 வயது மகளை சீரழித்த கொடூரம்: புதுச்சேரி புரட்சி பாரதம் கட்சி தலைவர் கைது