டெல்லி உள்பட 6 மாநிலங்களில் என்ஐஏ அதிரடி சோதனை

புதுடெல்லி: சர்வதேச பாபர் கல்சா அமைப்பு மற்றும் அதனுடன் தொடர்புடைய பிஷ்னோய் கும்பலை தேடி என்ஐஏ அதிகாரிகள் 6 மாநிலங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். சர்வதேச பாபர் கல்சா என்னும் சீக்கிய அமைப்பு மற்றும் அதனுடன் தொடர்புடைய லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுடனான தொடர்பு குறித்து 6 மாநிலங்களில் 32 இடங்களில் என்ஐஏ நடத்திய அதிரடி சோதனையில் ஏராளமான ஆயுதங்கள், வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கனடாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சர்வதேச பாபர் கல்சா அமைப்பை ஒன்றிய அரசு சட்ட விரோத நடவடிக்கை தடுப்பு (உபா) சட்டத்தின் கீழ் தடை செய்துள்ளது. இந்நிலையில், இந்த அமைப்பு மற்றும் அதனுடன் தொடர்புடைய லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலை தேடி தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், உத்தர பிரதேசம், டெல்லி ஆகிய 6 மாநிலங்களில் உள்ள 32 இடங்களில் திடீரென அதிரடி சோதனை நடத்தினர். இதில், 2 கைத்துப்பாக்கிகள் உள்பட அதிநவீன ஆயுதங்கள் ரூ.4.6 லட்சம் மற்றும் முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related posts

காவேரி மருத்துவமனை, டிசிஎஸ் நிறுவனம் சார்பில் புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான்: 5000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

தமிழகம் முழுவதும் 99 சதவீத காவல்நிலையங்களில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

கட்சி நிர்வாகிக்கு கொலை மிரட்டல்; பாஜ மாவட்ட தலைவர் மீது வழக்கு